TODAY /இன்றைய தகவல்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
The beauty of the soul is known in the face
தியானம் செய்து வருபவர்களின் முகத்தைப் பாருங்கள். அவர்களின் கண்களில் ஒருவித பிரகாசத்தை உணர்வீர்கள். அவர்கள் முகம் ஒரு வித மலர்ச்சியில் பூரித்திருப்பதைக் காண்பீர்கள்.
போலிச் சாமியார்களைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள். அவர்களெல்லாம் பசுத்தோல் போர்த்திய புலிகள்.
மனதில் அன்பையும் உள்ளத்தில் எளிமையும் கொண்டு நாள்தோறும் தியானம், தவம் செய்பவர்களின் முகம் நம்மை வசீகரிக்கத்தான் செய்யும்.
உள்ளம் கோயிலாக இருந்தால் அவரது முகத்தில் தெய்வம் தெரியும்.
மனத்தில் எவ்வித அழுக்கு இல்லாதவர்களால் மட்டுமே உண்மையாகச் சிரிக்க முடியும்.
அவர்களுக்குக் கோபம் வராது. அப்படி வருகிற கோபமும் உண்மையாக யாரையும் மனதளவில்கூட பாதித்துவிடாது.
குறுகுறு பார்வையில் கலகம் ஒளிந்திருக்கிறது.
மனதில் வஞ்சகம் இருக்கிறவர்களால் முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்க்கத் தெரியாது.
தவறு செய்திருப்பவர்கள் தங்கள் முகத்தைக் காட்ட கூச்சப்படுவார்கள்.
தப்பு செய்தவர்களின் முகமே தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.
ஒருவனின் முகத்தைக் கொண்டே அவன் கடுமையான உழைப்பாளி அல்லது இவன் சரியான சோம்பேறி தூங்கியே கழிக்கிறான் என்று கூறிவிடமுடியும்.
முகம் ஒருவனின் முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.
துன்பத்தில் உள்ளம் அழுவதை முகம் கண்ணீரால் காட்டிக் கொடுக்கிறது.
முகத்திற்கு எதையும் மறைத்து வைத்துக் கொள்ளத் தெரியாது. அதனால்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லி வைத்தார்கள்.
குழந்தைப் பருவத்திலேயே தன் குழந்தையின் சோம்பலைக் கண்டு அந்தப் பெற்றோர் எச்சரிக்கை கொள்ள வேண்டும். பிற்காலத்தில் அது சாதனைச் சிகரத்தில் அமர்வதற்கு சுறுசுறுப்பு அவசியம். ஆகையால் குழந்தையின் உடல்நலத்தில் அக்கறை கொண்டு அதற்கு மனரீதியான அணுமுறையைக் கையாளவேண்டும்.
மழை வருவதை மயில்கள் உணரும் எனக் கேட்டிருக்கிறோம். அதன் நுண்ணறிவை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
நமது எண்ணங்களைக்கூட தூய்மையாக வைத்துக் கொண்டால் நம்மை பிறருக்கு அடையாளங் காட்டுவதற்கு அதுவே துணையாய் நிற்கும்
படித்ததில் & பார்த்ததில் பிடித்தது