Wednesday, December 5, 2018

vegetables quiz ,விடுகதை

காய் கறிகள் பலவிதம் .

ஒவ்வொன்றும் ஒருவிதம்.

1.காய்ச்சல் வந்த காய்  “சுர”க்காய்.

2.பரிதாபமான காய்  “பாவ”க்காய்.

3.இரக்கம் மிகுந்தது  “கருணை” கிழங்கு.

4.மழைக்கு உதவும் காய் “குடை”மிள்காய்.

5.போதை தரும் காய்  “பீர்”க்கங்காய்.

6.ஏலம் விடும் காய் “பீட்”ரூட்.

7.அசைவ காய் - ”முட்டை”க்கோஸ்.

8.எங்கும் நிற்காத காய் - ”தேங்கா""ய்.

9.இனிப்பு உள்ளது  சர்க்கர”வள்ளி

10.குத்தும் காய் - “முள்”ளங்கி.

11.பாதுகாப்பு தருவது “சேனை”க்கிழங்கு

12.சிடு, சிடு  காய் - “கோவ”க்காய்.

13.ஒன்றுமே இல்லாத காய் “காலி”ஃப்ளவர்.

14. கிழமை கொண்ட காய் பூ”சனி”காய்

15.வெட்டும் காய் ''கத்தரி'' காய்

 16. அழைக்கும் காய் ''வா ''ழைக்காய்

17.வடிவம் கொண்டது ""உருளை'' கிழங்கு

18.கை உள்ள காய் முருங்""கை'' காய்

19. மரியாதை உள்ள காய் ''அவரை' காய்

20.வெள்ளை டை உள்ள காய் வெண் ''டை'' காய்

21. பசு அழைக்கும் காய் “மா"ங்காய்

22.இழுத்து பேசும் காய் ''சௌ ''சௌ

23. காயம் கொண்ட காய் வெங''காயம்''

24. அம்மன் பெயர் கொணடது
 தக் காளி ''

25. நிறம் சொல்லும் காய் ''பச்சை'' மிளகாய்

26.தங்கத்துக்கு நிகரானது ""கேரட்""

27.கல் உள்ளது நூக்"கல்'

படித்ததில் பிடித்தது
விடுகதை 

No comments:

Post a Comment