Friday, May 15, 2020

சம்பளம், கடன், சலுகைகள்!


வெளிமாநிலத் தொழிலாளர்கள்




1. வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு, இலவச ரேஷன் வழங்கப்படும்.

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு, ஒரு நபருக்கு, ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.
நாடு முழுதும், எட்டு கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த வசதி கிடைக்கும். இதற்காக, 3,500 கோடி ரூபாய் செலவிடப்படும்.

2. தொழில்நுட்பத்தின் வசதி, நமக்கு பல பலன்களை அளித்து வருகிறது. 'ஒரு நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், ஆகஸ்டு மாதம் செயல்படுத்தப்படும்.இதன் மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், அங்கு, ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இதையடுத்து, 23 மாநிலங்களில், 63 கோடி மக்கள், அதாவது, மொத்த கார்டுதாரர்களில், 83 சதவீதத்தினர் பயன்பெறுவர். அடுத்த ஆண்டு மார்சுக்குள், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்.

3. 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' என்ற பெயரில், வெளிமாநிலத் தொழிலாளர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்காக, குறைந்தபட்ச வாடகையுடன் கூடிய, வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், அருகில் உள்ள காலி இடங்களில், குடியிருப்புகளை அமைத்து, குறைந்த வாடகைக்கு விடப்படும்.
தனியாருடன் இணைந்து, இது செயல்படுத்தப்படும். மிக விரைவில், இது தொடர்பான விரிவான திட்டம் அறிவிக்கப்படும்.

சிறு வியாபாரிகள்


'முத்ரா சிசு' திட்டத்தின் கீழ், சிறு வியாபாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தற்போது மூன்று மாத தவணை நிறுத்தக் காலத்துக்குப் பின், இந்தக் கடனை முறையாக செலுத்துவோருக்கு, 2 சதவீத வட்டி குறைப்பு சலுகை அளிக்கப்படும். அடுத்த, 12 மாதங்களுக்கு, இந்த சலுகை வழங்கப்படும். தற்போதும் மொத்தம், 1.62 லட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளது. மூன்று கோடி பேர் வரை வாங்கியுள்ளனர். அதன்படி கணக்கிட்டால், 1,500 கோடி ரூபாய் பலன் கிடைக்கும்.



தெருவோர வியாபாரிகள்

தெருவோர வியாபாரிகளுக்காக, 5,000 கோடி ரூபாய் சிறப்பு கடன் உதவி திட்டம் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். 50 லட்சம் தெருவோர வியாபாரிகள், பயன் பெறுவர்.



வீட்டு வசதி


ஆண்டுக்கு, 6 - 18 லட்சம் ரூபாய் வருவாய் உள்ள நடுத்தர வர்க்க மக்களுக்காக, மானியத்துடன் கூடிய வீட்டுக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது, இந்தாண்டு மார்ச்சுடன் முடிவடைவதாக இருந்தது. இது, அடுத்த ஆண்டு, மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம், 2.5 லட்சம் குடும்பங்களுக்கு, 70,000 கோடி ரூபாய் பலன் கிடைக்கும். இதன் மூலம், ரியஸ் எஸ்டேட் துறையும் முன்னேற்றம் காணும்.

பழங்குடியினர்



அதிக வேலவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் ஒரு பகுதியாக, 'கேம்பா' நிதி எனப்படும், காடுகள் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் திட்டத்தின் கீழ், மாற்று இடங்களில், வனங்கள் உருவாக்கப்படும். இதனால், பழங்குடியினருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக, 6,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும்.

விவசாயிகள்


1. 'நபார்டு' வங்கி மூலம், விவசாயிகளுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. தற்போது, கூடுதலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய், அவசர முதலீட்டு நிதியாக வழங்கப்படும். இது ரபி பருவத்துக்கான அறுவடை மற்றும் கரீப் பருவத்துக்கு நிலத்தை தயார் செய்ய உதவும். இது, மூன்று கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்.
மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம், இந்தக் கடன், விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.

2. தற்போது, 2.5 கோடி விவசாயிகளிடம், விவசாய கடன் அட்டை இல்லை. அவர்களுக்கும், சலுகை வட்டியுடன், கடன் வழங்கப்படும். மொத்தம், 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

3. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறையினர், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, அவர்களும், விவசாயிகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இது மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


பத்திரிகைகளுக்கு நன்றி


தனது அறிவிப்புகளின் இறுதியில், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

நாடு தற்போதுள்ள இக்கட்டான நேரத்தில், பத்திரிகைகளின் பங்கு முக்கியமானது. அரசின் அறிவிப்புகளை மக்களுக்கும், மக்களின் பிரச்னையை அரசுக்கும் தெரிவிக்கும் முக்கிய பாலமாக, பத்திரிகைகள் உள்ளன.அரசின் இந்த அறிவிப்புகள், மக்களை சென்றடைய பத்திரிகைகள் உதவ வேண்டும். பத்திரிகைகளின் பணியை மிகவும் பாராட்டுகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

முதல் நாளில், 5.5 லட்சம் கோடி ரூபாய்



பிரதமர் மோடி தெரிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்களில், நேற்று முன்தினம், 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அறிவிப்புகளை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:



சிறு, குறு நிறுவனங்கள்

* பிணையில்லாத, 3 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி.
* கடனில் இருந்து மீள, 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடனுதவி.

* தொழிலை விரிவுபடுத்த, 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்ய உதவி.
* நிறுவனங்களுக்கான விளக்கத்தில் திருத்தம். இதன் மூலம் கூடுதல் முதலீடு, சலுகைகள் கிடைக்கும்
.
* 200 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு, இனி சர்வதேச டெண்டர் கிடையாது. சிறு, குறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு
* 'ஆன்லைன்' மூலமாக விற்பனை செய்ய வாய்ப்பு.



வருங்கால வைப்பு நிதி.

* குறிப்பிட்ட பிரிவு நிறுவனங்களுக்கான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தும் தொகையை அரசே ஏற்பது, மேலும், மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
.

* நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பிடித்தம், 12ல் இருந்து, 10 சதவீதமாக குறைப்பு.
வங்கி சாரா நிறுவனங்கள்.

* 30 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு பணப் புழக்க திட்டம்.

* பகுதி கடன் உறுதி திட்டம் தொடரும்.



மின் பகிர்மான நிறுவனங்கள்.

* 'டிஸ்காம்' எனப்படும் மின் பகிர்மான நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி.

கான்ட்ராக்டர்கள்.

* அரசு அமைப்புகளின் வேலைகளை முடிப்பதற்கான காலக்கெடு, ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு.



ரியல் எஸ்டேட்.

* முடிக்க வேண்டிய கட்டுமானத் திட்டப் பணிகள், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு.

வரி சலுகைகள்

* டி.டி.எஸ்., எனப்படும் வரிப் பிடித்தம், 25 சதவீதம் குறைப்பு.

* வருமான வரிக் கணக்கு தாக்கல் தேதி நீட்டிப்பு.

* தொண்டு நிறுவனங்களுக்கான, 'ரீபண்ட்'கள் உடனடியாக வினியோகம்.

பணம் வேண்டாம் எங்களுக்கு!


பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நினைவுபடுத்துகிறார். இதை செயல்படுத்தினால் நல்லது. கொரோனாவில் பாதித்த விவசாயிகளுக்கு என்று சிறப்பு திட்டம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

விவசாயிகளுக்கு பணமாக எந்த சலுகையும் வேண்டாம். விவசாயிகள் உழைப்பதற்கு தயாராக இருக்கின்றனர். சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம், நுண்ணுாட்ட சத்துக்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட மூலதன செலவுகளை, மத்திய அரசு ஏற்க வேண்டும்.

பல மாவட்டங்களில், 100 நாள் வேலை திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், விவசாய தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஊதிய நிலுவையை விரைந்து வழங்க வேண்டும். விருத்திகிரி, பொதுச்செயலர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு

thanks dinamalar 

No comments:

Post a Comment