Thursday, May 14, 2020

கோயில் சுவர் ஏன் சிவப்பு வெள்ளை வர்ணத்தில் பூசப்படுகின்றன தெரியுமா?

கோயில் சுவர் ஏன் சிவப்பு வெள்ளை வர்ணத்தில் பூசப்படுகின்றன தெரியுமா?

கோயில்கள் உள்ளிட்ட ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் மூலம் மனிதனுக்கு தேவையான உடல் நலன் எனும் அருளைப் பெற பல குறிப்புகள் வைத்து சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். அப்படி கோயில் சுற்றுசுவரில் வெள்ளை, சிவப்பு நிறங்கள் அடிக்கப்படுவது ஏன் என்பதை இங்கு பார்ப்போம்.

நமக்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள பல விஷயங்கள் மூடநம்பிக்கை என தோன்றினாலும், அதை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை குறித்து தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனடிப்படையில் பொதுவாக எல்லா கோயிலின் சுற்றுச் சுவரில் சிவப்பு, வெள்ளை நிறங்களில் பட்டை, பட்டையாக வர்ணத்தைப் பூசப்பட்டிருக்கும். அது ஏன் சிவப்பு, வெள்ளை நிறத்தில் வைத்தனர் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும். கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும். உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் (மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்) குறிக்கும். நந்தி தர்மத்தை குறிக்கும். கர்பகிரகத்தில் இருக்கும் இறைவன் எப்போதும் தர்மத்தையே பாக்கிறான் என்பதே அர்த்தம். பெரிய நான்கு கோபுரவாசல் ஆலயங்கள் நான்கு வழிகளை காட்டுகின்றன. அவை பக்திவழி.ஞானவழி, ராஜவழி, கர்மவழிகளை குறிக்கும். எந்த வழிகளாலும் நீ இறைவனை காணலாம் என்பதே அதன் அர்த்தம்.

இங்கே நான்கு வாசல் வைக்கப்பட்ட ஆலயமானாலும் கர்பகிரத்துக்கு ஒருவாசல் தான் வைத்தார்கள் ஏன் என்றால் தாயின் கருவறையும் ஆலய கர்பகிரகமும் ஒன்றுதான். அதனாலேயே கர்பகிரகத்தை இருளாகவும் அதன் விதானத்தையும் அரைகோளவடிவமாக வைத்தார்கள்.

வெளியில் உள்ள ஒளிகதிர்களை கோபுரம் வாங்கி கர்பகிரத்து அனுப்புகிறது. கர்பகிரகம் இருளாக இருப்பதால் அந்த ஒளிக்கதிர்கள் தங்கமுடியாமல் வெளியேறிகொண்டு இருக்கும். கருவறையில் ஒளிக்கும் வேத மங்கள மந்திர அலைகள் இதனாலே வெளியே பரவுவதால் அவை உடலில் படவேணும் என்பதற்காகவே ஆண்கள் சட்டை அணிவது இல்லை.

கர்பகிரகத்துள் இறைவன் ஏன் வந்தான் என பார்போம். ஆண்பெண் கலவையிலேயே கர்பம் தரிக்க முடியும். அந்த கலவையின் நிறமாகதான் ஆணின் வெள்ளையணுவை வெள்ளை நிறமாகவும் பெண்ணின் கருப்பை நிறத்தை காவி (சிப்பு) நிறமாகவும் ஆலய வெளிச்சுவரில் வெள்ளையும் காவியுமாக வர்ணம் தீட்டிணார்கள். இந்த கலவையில்தான் இறைவனின் ஆன்மா தாயின் கர்பகிரகத்துள் பிண்டவடிவில் தோண்றுகிறான். இந்த பிண்ட வடிவம்தான் லிங்கத்தின் உறுளை வடிவமாக வைத்தனர். மிருகங்கள் கூட பிண்டவடிவிலேயே தோண்றுகின்றன..

ஆகாயத்தில் இருந்து காற்றுக்கு அனுப்பி காற்றில் மூலமாக யாகத்துக்குள் அனுப்பி வைத்து யாகஅக்னியில் இருந்து நிறைகும்பத்துக்கு மாற்றி அந்த நீரை விக்ரகத்துள் அனுப்பி பஞ்சபூதத்தை அந்த விக்ரகத்துள் அடக்கியே நாம் இறைவனை வழிபடுகிறோம். அதனாலேயே பிராணபிதிஷ்டை என அழைக்கிறோம்.

நம் உடலில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் உள்ளன. சிவப்பு அணு நம் உடலின் நுரையீரலிலிருந்து உடலின் பல பகுதிக்கு ஆக்ஸிஜனுடன் கூடிய ரத்தத்தை கொண்டு சேர்க்கிறது. அதே போல் வெள்ளை அணுக்கள் நம் உடலின் எந்த பகுதியும் நோய் மற்றும் காயத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், நோய் கிருமிக்கு எதிராக எதிர்த்து போராடுவது, காயத்தை விரைவாக குணமாக்குதல் என சில செயல்களில் ஈடுபடுகின்றது. இதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்து இருக்க உதவுகிறது. இதை குறிக்கும் விதமாக வெள்ளை, சிவப்பு நிறங்களில் வர்ணம் பூசப்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், நாம் கோயிலில் நுழையும் போது, கோயிலின் முதல் படிகட்டை நாம் குனிந்து கும்பிடுவதன் பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளன. அதாவது நாம் குனிந்து படியை தொடுவதால் நம் உடலின் சூரிய நாடி இயங்குகிறது. அது ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.. அப்போது நம்மிடம் இருக்கும் தீய சக்திகள் நீங்கி, கோயிலில் இருக்கும் தெய்வ சக்தி நமக்கு கிடைக்கும் அதிர்வலைகள் நமக்கு கிடைக்கிறது.

அதனால் தான் நாம் கோயிலுக்கு சென்று வருவதால் அங்கு இருக்கும் நேர்மறை அதிர்வலைகளும், சக்திகளும் நமக்கு கிடைத்து ஒரு வகை புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. அதனால் முன்னோர்கள் சொல்லியுள்ள பல சம்பிரதாயங்களைப் பின்பற்றுங்கள். அதன் அறிவியல் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள முயன்றாலே நமக்கு பல வியப்புக்குரிய விஷயங்கள் தெரியவரும்



interest to reading & watching

படித்ததில் & பார்த்ததில்  பிடித்தது 

No comments:

Post a Comment